ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,512 வாக்குகள் பெற்று, 91,374 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, 24,138 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாலும், அவர் டெபாசிட் தொகையை இழந்தார். இந்த தேர்தலில் நோட்டா 3-ஆவது இடத்தைப் பிடித்தது.