மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!

Ansgar R |  
Published : Oct 11, 2024, 04:57 PM IST

Murasoli Selvam : முரசொலி நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் 10ம் தேதி காலமானார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் நேற்று மதியமே அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முரசொலி செல்வத்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

தேமுதிக தலைவர் பிரேமலதாவும் நேரில் வந்து மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதாவும் நேற்று நேரில் வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை துறை பிரபலங்களும் மறைந்து முரசொலி செல்வத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது அவருடைய இறுதி ஊர்வலமானது தொடங்கி இருக்கிறது.

03:18அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !
04:20அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது! எம்.பி. கனிமொழி பேட்டி
02:01தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி
01:292026 திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் பட்டியல்.!
03:34கேட்டதையெல்லாம் தரும் திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர்! இனி சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கே
06:29ஆளுநரும், திமுகவும் சேர்ந்துபேசி வச்சிக்கிட்டு இத பண்றாங்களோனு சந்தேகம் வருது - அருண்ராஜ்
05:39இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
03:54ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்
03:29கிளி ஜோசியம் கேட்டுகிட்டு ஊடகத்தில் பதிவிடுவது போல போடுகிறார்கள் - நிர்மல் குமார் பேட்டி
02:42விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
Read more