
விவசாயிகள் வறட்சி மற்றும் புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் நாங்கள் நிவாரணம் கொடுத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் முழுமையாக தூர் வாரினோம் அதனால் தண்ணீர் உடனடியாக வடிந்தது ஆனால் திமுக ஆட்சி காலத்தில் முறையாக தூர்வாரவில்லை அதனால் தண்ணீர் வடியவில்லை.இந்த அரசு துரிதமாக செயல்பட்டு ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அனல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அப்படி எடுத்துச் சென்றால்தான் மற்ற விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும்.அதிமுக ஆட்சி காலத்தில் குருவை நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்து கொடுத்தோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கூட நெல்லை கொள்முதல் செய்தோம்.மத்திய அரசை தமிழக அரசு முறையாக அணுக வேண்டும்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என கேட்டார்கள். அதே நேரத்தில் நாங்கள் விவசாயிகள் பிரச்சனை குறித்து தான் பேசுகிறோம் அது அரசியல் செய்யவில்லை.முதல்வர் பேட்டி கொடுக்கும் பொழுது மூன்று நாளில் பிரச்சினை தீர்ந்து விடும் என கூறினார்.டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 30 லட்சம் நெல் முட்டைகள் தேங்கியுள்ளன. நெல் கொள்முதல் செய்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது அனைத்து விதத்திலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. இந்த அரசின் மூலமாக விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என தமிழக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூரில் பேட்டி அளித்தார்.