Aug 11, 2022, 1:42 PM IST
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக நித்தியா இருந்து வருகிறார். அவரது கணவர் வெற்றிச்செல்வன், இவர், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை கேட்க வந்த குணசேகரனை, மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன் அறிவாள் கொண்டு தாக்க முயன்றுள்ளார். தப்பி ஓடியும் விடாமல் துரத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.