தமிழக வெற்றி கழகம் தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா ? என்ன முடிவு என்று தெரியவில்லை.கட்டமைப்பு மிக முக்கியம். அதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி என்ன ? நிலை எடுக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவது தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும் . தமிழகத்தில் 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான்.