
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகள் வீர வசனம் பேசி நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்தார், மூன்று ஆண்டுகள் நிதி ஆயோ கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தற்போது நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என மக்களுக்கு விளக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் முதலமைச்சர் பதில் சொல்லவதில்லை, ராமன் வில்லிலிருந்து வரும் அம்பை போல தமிழக முதலமைச்சரை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கணங்களை தொடுத்து வருகிறார், தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை திசை திருப்பும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது, தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க திமுக முன்வரவில்லை, விளம்பர வெளிச்சத்தில் செயல்படும் திமுக அரசு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது, திமுகவை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது, 2026 ல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக அமையும், ரோடு சோவில் முதல்வர் நடந்து செல்வது முக்கியமில்லை, மக்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், 2026 இல் 234 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது லட்சியம், 2026 இல் 200 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம்" என கூறினார்