Velmurugan s | Published: Mar 19, 2025, 6:00 PM IST
Chief Minister Stalin congratulated astronaut Sunitha Williams : சர்வதேச விண்வெளி மையத்தில் 10 நாட்கள் பணிக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ் தான் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி வருவது சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து 286 நாட்களாக விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வர அமெரிக்காவின் நாசா பல்வேறு திட்டங்களை வகுத்தது. மேலும் எலான் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கியது.தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.