முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி பயணத்தின் போது பிரபல இருட்டுக் கடையில் அல்வா ருசித்து, கடை உரிமையாளரிடம் அதன் பெயர்க் காரணம் குறித்து கேட்டறிந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக திட்டப்பணிகள் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுபயணமாக பிப்ரவரி 6, 7 ஆகிய இரண்டு நாள் வந்துள்ளார். நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தவர், மாலை நேரத்தில் நெல்லை டவுண் வழியாக பயணம் செய்தார்.
அப்பொழுது நெல்லையில் உள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடையை பார்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் காரில் இறங்கி கடைக்கு சென்று அல்வா வாங்கி ருசித்தார். இதனையடுத்து அல்வா ருசியாக இருப்பதாக பாராட்டிய முதலமைச்சர் இருட்டைக்கடை என பெயர் வர காரணம் என்ன என கடை உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கடை உரிமையாளர் முன்பு லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா கடை நடத்தி வந்ததாகவும். இதன் காரணமாகவே இருட்டுக்கடை அல்வா என பெயர் பெற்றதாகவும் அல்வா கடை உரிமையாளர் பதில் அளித்தார். இதனையடுத்து இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார் .