
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பிரிவு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் கடை எண் : 7235 அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் மகேஸ்வரன் என்பவர் மதுபான கடையில் முறைகேடாக மது விற்பனை செய்யும் கூடுதல் பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. டாஸ்மார்க்கில் முறைகேடாக 10 ரூபாய் வாங்கும் பணம் எங்கே செல்கிறது என மது பாட்டில்கள் வாங்குவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டு வரக்கூடிய நிலையில் 10 ரூபாயை வசூல் செய்து எடுத்துச் செல்லும் மேற்பார்வையாளர் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.