படுகொலை செய்யப்பட்ட Armstrong.. அயனாவரம் கொண்டு செல்லப்படும் அவர் உடல் - கண்ணீர் மல்க பின்தொடரும் ஆதரவாளர்கள்!

படுகொலை செய்யப்பட்ட Armstrong.. அயனாவரம் கொண்டு செல்லப்படும் அவர் உடல் - கண்ணீர் மல்க பின்தொடரும் ஆதரவாளர்கள்!

Ansgar R |  
Published : Jul 07, 2024, 12:11 AM IST

Armstrong : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று மாலை அவரது இல்லத்தின் வாசலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூத்த வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவருமான திரு ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் நின்று தனது சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். 

உடனடியாக அவரை மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து அப்போலோ மருத்துவமனையில் அவரது வீட்டார் அனுமதித்தனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் மிகுந்தவாறு கொண்டு செல்லப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில் அவரை படுகொலை செய்த கும்பலை பத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று இந்த வழக்கு சம்பந்தமாக 11 பேரை தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஒரு ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாகத் தான் இந்த படுகொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுடைய உடல், தற்போது அயனாவரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வழி நெடுங்க அவருடைய ஆதரவாளர்கள் கூடி நின்று கோஷங்களை எழுப்பியவாறு சென்று வருகின்றனர். 

08:21மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
09:17மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
02:25"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!
02:41Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
03:03எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !
03:24மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
08:15"உங்களை நாங்க பத்திரமா பார்த்துப்போம்!" – அதிரடி காட்டிய அமைச்சர் ஆனந்த்!
09:52திமுக, அதிமுகவுக்கு ஓப்பனா சவால் விட்ட சி.விஜயபாஸ்கர்! மிரட்டல் பேச்சு!
02:44🔥 சட்டமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்துட்டு தவெகவில் ஐக்கியமான விஜயபாஸ்கர்!
05:29"கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் இபிஎஸ்! திமுகவுடன் எடப்பாடி ரகசிய டீல்? - செங்கோட்டையன் பேச்சு
Read more