தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தவெக தீவிரமாக இறங்கி உள்ளது. தவெக சார்பாக 'மக்கள் விரும்பும் முதலமைச்சர்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' செயலியை இன்று அறிமுகம் செய்தார் விஜய்.