முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகம் சார்ந்தது, அரசியல் அல்ல – நடிகை கஸ்தூரி பேட்டி !

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகம் சார்ந்தது, அரசியல் அல்ல – நடிகை கஸ்தூரி பேட்டி !

Published : Jun 23, 2025, 12:03 PM IST

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முற்றிலும் ஆன்மீக நிகழ்வாகும் என்றும், இதை அரசியல் விழாவாக பார்ப்பது தவறு என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திமுக முன்னதாக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக இருந்தது என்றும், தற்போதைய மாநாடு மக்களின் பேரெழுச்சியுடன் நடைபெறுவதாகக் கூறினார். இயக்குநர் அமீர் கூறிய மதவாதக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஸ்தூரி, முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் உறுதியாக பிரதிபலிக்கப்படுகிறது. மாற்றுமதத்தினர் தேவையில்லாத சொற்களை தவிர்க்க வேண்டும். சுல்தான்கள் கூட கோவிலுக்கு நற்பணி செய்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை, என கூறினார். முருகன் தமிழ்க்கடவுள் என்றும், அவருடைய மூதாதையர்கள் தமிழர்களே அவர் தமிழனாக ஏற்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நடிகர் விஜய் பிறந்த நாள் குறித்து பேசிய கஸ்தூரி, அவரது பிறந்த நாள் ஒரு இடத்தில் மட்டுமல்ல எங்களது ஒவ்வொரு மனதிலும் கொண்டாடப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல விதிமுறைகளால் அந்த அன்பு குறையாது, என்றார். விஜய் சரியான பாதையில் பயணித்து வருகிறார். வெற்றி என்பது அவருடைய கட்சியின் பெயரிலேயே உள்ளது. அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

03:20உதயநிதி ஸ்டாலின் தலைவர்களிடம் வாழ்த்து பெற்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
02:24வால்பாறை தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம்: ட்ரோன் படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
03:46தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய திமுகவினர் போராட்டம் !
06:02"அவர் வந்தாலே கலாய்ப்பாரே..." உதயநிதியை கலாய்த்த முதலமைச்சர் விஜய்! 😂
07:28"குற்றவாளிகள் பக்கம் சொகுசாக தூங்கும் Dummy CM!" - உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!
03:09உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் !
02:03கள்ளக்குறிச்சி பரபரப்பு : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி DYFI போராட்டம் !
03:50பெரம்பலூர் : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் சட்ட எச்சரிக்கை !
02:49கள்ளக்குறிச்சி : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரைக் கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
02:30கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணம் கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!