சென்னை விமான நிலையம் வந்தஇலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள்!

Velmurugan s  | Published: Apr 2, 2025, 1:00 PM IST

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பக்கி சூடு நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 13 மீனவர்களையும் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர். 13 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.