மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து பள்ளி மாணவன் சாதனை, மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் மகனுடன் ஓடி வந்து உற்சாகப்படுத்திய தாய்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அஸ்வின். 5ம் வகுப்பு பயின்று வருகிறான். இன்று மயிலாடுதுறையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் கைகளால் சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து சாதனை புரிந்தான். சவாலான ஸ்கேட்டிங்கை ஒருபுறம் கவனித்துக் கொண்டு மறுபுறம் மனதை ஒருநிலைப்படுத்தி சிலம்பத்தின் பல்வேறு வரிசைகளை செய்து காட்டியபடி சிறுவன் சென்ற போது அவனை உற்சாகப்படுத்துவதற்காக அவனது தாய் சிறுவனுடன் ஸ்கேட்டிங் வேகத்திற்கு ஈடாக வேகமாக கைத்தட்டை படியே ஓடி வந்தார். இலக்கை அடைந்ததும் மகனை ஆரத் தழுவி பாராட்டினார். ஓடி வந்ததில் அவருக்கு மூச்சு வாங்க கீழே அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டார். சிறுவனின் சாதனை நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றதுடன் அவரது தாயின் பாசம் பார்ப்பவர்களை நெகிழ செய்தது.