நிதி பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டிய சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசு வழங்கும் நிதியில் 1 ரூபாய் கூட வீணாக செலவழிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கூறியதாவது நிதி விஷயத்தை பொருத்தவரை மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதி ஒரு ரூபாயை கூட தமிழக அரசு வீணாக செலவு செய்ய வில்லை. அவ்வாறு ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் அதை தெரிவிக்கலாம். அது குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.