script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

சாதிய ஆணவத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை - விசிக போராட்டம்

Jul 4, 2023, 4:59 PM IST

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நடுவதிலும், கொடி ஏற்றுவதிலும் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி மறுத்து சாதிய ஆணவத்தோடு செயல்படுவதாக கூறி பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நடவிடாமல் செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்.

புகார் அளிக்க செல்லும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை காவல்துறையினர் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.