Dec 12, 2023, 10:44 PM IST
சென்னையில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், புயல், வெள்ளம் தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில் புயலுக்கு முந்தைய நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தமுறை ஏற்பட்ட பாதிப்பை காட்டிலும் தற்போது பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய குழுவினரே பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் வைப்பு வைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே தான் ரொக்கமாக நேரில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் கேட்கும் நிதியை உடனே வழங்குவதற்கு நாங்கள் என்ன ஏடிஎம் இயந்திரமா என்ற மத்திய அமைச்சரின் கருத்தால் காட்டமடைந்த உதயநிதி ஸ்டாலின், நாங்கள் என்ன உங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம், தமிழக மக்களின் வரிப்பணம் தானே.
மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமலேயே நிதியை அள்ளி கொடுக்கும்போது தமிழகத்திற்கு மட்டும் வழங்க மறுப்பது ஏன்? தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் என்று தெரிவித்தார்.