
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 27 அன்று தனது அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை நீக்கினார். ஒருவர் பொன்முடி. மற்றொருவர் செந்தில் பாலாஜி.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திமுக மீது பெரும் அழுத்தம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்தே இரு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், ''இது தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்டாலின் தன்னார்வமாக எடுத்த முடிவு அல்ல. உச்சநீதிமன்றம் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டனர்'' என்றார்.