கேரளா மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கேரளா மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை உயிரிழந்தார். பின்னர்  பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட உம்மன் சாண்டியின் உடல் நேற்று மாலை புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கல்லறைத்தோட்டத்தில் அரசு மரியாதையின்றி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more