Apr 9, 2023, 5:35 PM IST
இன்று (ஏப்ரல் 09) காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார். பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைக்கு வந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த யானைகளுக்கு பிரதமர் கரும்பு உணவளித்தார். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்தார்.
பின்னர் அவர்களுடன் சிறிது நேரம் பேசினார். மேலும் அந்த ஆவணப் படத்தில் நடித்த ரகு என்ற யானையும் மோடி சந்தித்தார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, பொம்மி மற்றும் ரகுவுடன் அற்புதமான பொம்மனையும் பெல்லியையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. முதுமலையில் கம்பீரமான யானைகளையும் சந்தித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இப்பயண வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!