Dec 29, 2024, 7:59 PM IST
117-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி: உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் பிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பது இதுவே முதல் முறையாகும். பிஜி நாட்டு மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.