Jan 16, 2025, 11:53 AM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள டிரெயின் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த அளவுக்கு எமோஷனலாக நடித்துள்ளார் என்பதை விவரிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நடிப்பில் சிவாஜியையே விஜய் சேதுபதி மிஞ்சிவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.
டிரெயின் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தான் இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.
அவர் இசையமைத்த பாடலை தான் இந்த கிளிம்ஸ் வீடியோவில் இணைத்துள்ளனர். இப்படலை ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார். இப்பாடல் வரிகளை கபிலன் எழுதி உள்ளார். டிரெயின் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.