கங்குவா ட்ரைலர் விமர்சனம்: சூர்யா ரசிகர்கள் சொல்வது என்ன?

கங்குவா ட்ரைலர் விமர்சனம்: சூர்யா ரசிகர்கள் சொல்வது என்ன?

Published : Aug 13, 2024, 01:32 PM IST

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்டமான காட்சிகள், சூர்யாவின் நடிப்பு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை என அனைத்தும் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

வீரம், வேதாளம், விஸ்வாசம் என கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சிவா. இதுவரை கமர்ஷியல் படங்களை மட்டும் இயக்கி வந்த சிவா, தற்போது முதன்முறையாக பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது. இது குறித்து மக்கள் சொல்லும் விமர்சனம் என்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் அண்மையில் வெளிவந்த ஃபயர் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.  இந்நிலையில், கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன், பாகுபலிக்கே சவால் விடும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் சூர்யாவின் நடிப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் மெர்சலாக இருப்பதாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more