இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி, 25-வது திருமணநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தி இருக்கிறார். மனைவி குஷ்பு மற்றும் மகளுடன் சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட சுந்தர் சி, சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோயிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.