Sep 24, 2022, 7:21 AM IST
டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பிரின்ஸ். டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘பிம்பிலிக்கா பிலாப்பி’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜெசிகா என்கிற 2-வது பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தமன் பாடி உள்ளார். தெருக்குரல் அறிவு இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். இதன் லிரிக்கல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.