vuukle one pixel image

பெரும் சேனை ஒன்று தேவை; வெளியானது சிவகார்த்திகேயனின் பராசக்தி டீசர்!

manimegalai a  | Published: Jan 29, 2025, 4:25 PM IST

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்துவரும் திரைப்படம் பராசக்தி.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதர்வா, ஸ்ரீ லீலா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆகிய நால்வரின் இன்ட்ரோவும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் சேனை ஒன்று தேவை... பெரும் சேனை ஒன்று தேவை என கோஷமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஜெயம் ரவி புதுமையான வில்லனாக இப்படத்தில் பார்க்கப்படுகிறார். பராசக்தி டீசரே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.