Dec 27, 2022, 2:34 PM IST
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது மக்கள் நோய் நொடியின்றி வாழவும், தனது மகன் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படம் வெற்றியடையும் பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஷோபா சந்திரசேகர், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அந்த பேட்டியில் அவர் பேசி உள்ளார்.