பழம்பெரும் நடிகை சரோஜாதேவி 87 வயதில் இயற்கை எய்தியது சினிமா உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் சரோஜா தேவியின் இல்லத்தில் அவரது திருவுடல் அஞ்சலிக்காக நாளை வரை வைக்கப்படுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.