Nov 11, 2022, 7:31 PM IST
காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம் கடந்த சில வருடங்களாக, ஹீரோ சப்ஜெக்ட் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், தோல்வியை தழுவினாலும் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தற்போது, சந்தானம் பிரைவேட் டிடெக்டிவாக நடித்துள்ள திரைப்படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. மனோஜ் பீதா இயக்கி இருக்கும் இந்த படத்தை, லாபிரிந்த் பிலிம்ஸ் தயாரித்துளளது. மேலும் இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக்காகி தற்போது உருவாகியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின், ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.