நேத்து ராத்திரி கூட பேசுனான்... அப்படி என்னடா அவசரம் உனக்கு...! மயில்சாமி மறைவால் கலங்கிப்போன எஸ்.வி.சேகர்

நேத்து ராத்திரி கூட பேசுனான்... அப்படி என்னடா அவசரம் உனக்கு...! மயில்சாமி மறைவால் கலங்கிப்போன எஸ்.வி.சேகர்

Published : Feb 19, 2023, 01:27 PM IST

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளம் வாயிலாக சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் பேசுகையில், நேற்று இரவு கூட மயில்சாமி தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார். இப்போ 57 வயசு தான் ஆகுது. அவன் 70 - 80 வயசு வரை இருந்திருக்கலாம். அவனது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. சினிமா இருக்கும் வரை, நகைச்சுவை இருக்கும் வரை மயில்சாமி வாழ்ந்துகொண்டு தான் இருப்பார் என்று அந்த வீடியோவில் கலங்கியபடி பேசி உள்ளார் எஸ்.வி.சேகர்.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more