Ganesh A | Published: Mar 31, 2025, 1:27 PM IST
Sardar 2 Movie Prologue : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் படம் சர்தார் 2. இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் பிரம்மிப்பூட்டும் மாஸ் காட்சிகளுடன் கூடிய டீசரை Prologue என்கிற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
சர்தார் 2 திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகிறது என்பது அந்த டீசர் மூலம் தெரியவந்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டு உள்ளதாம். இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் கார்த்தி. டீசரிலேயே அவர் வாள் சண்டையிடும் காட்சிகள் சிறப்பானதாக இருக்கிறது. படத்திலும் இந்த காட்சி ஹைலைட் ஆனதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2 படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இணைந்துள்ளார். அவர் இசையமைத்துள்ள பின்னணி இசை இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. அது வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.