லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கிரியா யோகா குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் ஒய்எஸ்எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் கிரியா யோகா பயிற்சிபெற்று இருக்கிறார். கிரியா யோகா கற்றுக்கொண்டதன் வாயிலாக தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கிரியா யோகா பயிற்சி தனது வாழ்வில், அமைதி, வலிமை, தெய்வீக உணர்வு, கருணை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.