காஞ்சனா பட எபக்ட்டில்... ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் இருந்து வெளியான பகை முடி லிரிக்கல் பாடல்!

Mar 14, 2023, 9:18 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் இருந்து சமீபத்தில்,  கடந்த 1962 ஆம் ஆண்டு இயக்குனர் திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான 'வீர திருமகன்' படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம்' என்கிற பாடலின் ரீமேக்காக புதிய வெர்ஷனில் வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

காஞ்சனா பட எபெக்டில், அகோரிகள் பலர் மத்தியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ள பகை முடி என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இதில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள நிலையில்,  நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்துள்ளார்.  இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.. ஒரு சில காரணங்கள் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.