தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் பார்த்த தயாரிப்பாளர் கே ராஜன், தனுஷை சரமாரியாக சாடி இருக்கிறார்.
தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த தயாரிப்பாளர் கே ராஜன், படத்தில் ஹீரோ பிராந்தி குடிக்கிறார். உடனே அதைப் பிடுங்கி ஹீரோயினும் குடிக்கிறார். இதெல்லாம் என்ன கலாச்சாரம். இதில் அதுக்கு என் மேல் என்ன கோபம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். உன் மீதுதான் மக்களுக்கு பயங்கர கோபம். இதெல்லாம் ஒரு படமா என கே.ராஜன் சாடி உள்ளார்.