'பொன்னியின் செல்வன் 2' படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான 'சிவோஹம்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்துள்ள திரைப்படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' என்றே பெயரிட்டுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து... இம்மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி, 'பொன்னியின் செல்வன் 2' படம் ரிலீஸ் ஆக உள்ளது.

முதல் பாகத்தின் ரிலீஸுக்கு பம்பரமாக சுழன்று புரோமோஷன் செய்த படக்குழுவினர்,  ஒவ்வொரு சிங்கிள் பாடலுக்கும் விழா வைத்து ரிலீஸ் செய்தனர்.  இரண்டாவது பாகத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன்காக செலவு செய்யவில்லை என்றாலும், சமூக வலைதளத்தின் மூலம்... படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அகநக பாடல், இரண்டாம் சிங்கிள் பாடலான வீரா ராஜ வீரா, மற்றும் ட்ரெய்லர் போன்றவை அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.. தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

 ரகுமானின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்த பாடல், ஆன்மீக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில்.. அமைந்துள்ளது. 'சிவோஹம்' என்று தொடங்கும் இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி,  கார்த்தி,  திரிஷா,  பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் பட தொகுப்பு செய்ய, தோட்டா தரணியின் கலைவண்ணத்தில் இப்படம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more