Mar 22, 2023, 11:25 PM IST
சமீப காலமாக சீரியலில் இருந்து, வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா மற்றும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா நடித்துள்ள, N4 திரைப்படம் விரைவில் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில்... இதுவரை சென்னை அடித்தட்டு மக்கள் பற்றி சொல்லப்படாத கருத்தை கூறியுள்ளதாக இயக்குனர் லோகேஷ் குமார் கூறியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள மைக்கில் தங்கதுரை நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கேபிரியல்லா நடித்துள்ளார். நடிகை வினுஷா இரண்டாவது நாயகியாக வாய் பேசமுடியாத பெண்ணாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அப்சல் ஹமீது நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் அனுபமா குமார், பிராகிய நகர, அக்ஷய் கமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நவீன் ஷர்மா என்பவர் தயாரித்துள்ளார்.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில்... இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, இப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.