Jun 8, 2024, 5:05 PM IST
தமிழ் சினிமாவில் இன்று தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து, அதில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் சிறந்த நடிகர் தான் விஜய் சேதுபதி. தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தனது தனித்திறமையை நிரூபித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நடிகர் தான் இவர் என்றால் அது மிகையல்ல.
வருடத்திற்கு பல ஹிட் படங்களை கொடுக்கும் விஜய்சேதுபதி, கடந்த சில ஆண்டுகளாகவே தனது படங்களை அளவை குறைந்து கொண்டே போகிறார். இந்நிலையில் அவருடைய ஐம்பதாவது திரைப்படமான "மகாராஜா" திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தில் இருந்து "தாயே தாயே" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் இன்று மதியம் வெளியானது.
பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் குரலில் ஒலித்துள்ள இந்த அருமையான பாடலை எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து. இந்த முதல் சிங்கிள் பாடலை வெளியிட்ட கவிப்பேரரசர் வைரமுத்து, விஜய் சேதுபதிக்காக ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அவர் எழுதிய அந்த பதிவில்..
விஜய் சேதுபதி, ஒரு தனிமைத் தந்தை.. உறவற்ற வெறுமை, மகளென்ற பந்தத்தால் நிறைந்து வழிகிறது.
முடிதிருத்தும் தொழிலாளி அவர், ஆனால், உலகத்தின் பெரும்பணக்காரர்களுள் தானும் ஒருவன் என்று
பெருமை பேசுகிறார். எப்படி? 'அன்பான மகள்வந்ததால் அம்பானி நானாகிறேன்’
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில், சித் ஸ்ரீராம் குரலில், மஹாராஜா படத்தின்
ஒரு தனிப்பாடல் இது. மூன்றுமுறை கேளுங்கள் முழுச்சாரம் இறங்கும்" என்று அவர் கூறியுள்ளார்.