vuukle one pixel image

சினிமாவை தொடர்ந்து... அண்ணாச்சியின் அடுத்த டார்கெட் அரசியலா? - லெஜண்ட் சரவணன் சொன்ன ஷாக்கிங் பதில்

Ganesh A  | Published: Dec 12, 2022, 2:41 PM IST

கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம்பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் லெஜண்ட் சரவணன் உடன் நடிகர்கள் ரோபோ சங்கர், அப்புகுட்டி மற்றும் மக்கள் தொடர்பாளர்  நிகில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பிரைடல் மேக்கப் ஸ்டுடியோவை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், கோவையில் கலை ரசனை உள்ளவர்கள் அதிகம் உள்ளதாக தெரிவித்தார். அப்போது தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், தற்போது கதை தேர்வு நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறி உள்ளார்.

அடுத்ததாக அரசியலில் நுழைய ஆர்வம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், அதனை மக்களும் மகேசனும் தான் முடிவு செய்யனும். மக்கள் அழைத்தால் வருவேன் என கூறினார். இதையடுத்து தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய ஆட்சி நன்றாக சென்றுகொண்டிருப்பதாகவும் லெஜண்ட் சரவணன் தெரிவித்தார்.