நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ள 'ஸ்டார்' படத்தில் இருந்து, மெலோடி என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியானது.
இயக்குனர் இலன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர், கவின் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அணைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம், கோடையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக அடுத்தடுத்து சில அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்தி இடம்பெற்றுள்ள மெலோடி என்கிற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலில், கவின் லேடிஸ் கெட்டப்பில் அசத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல்தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.