Ganesh A | Published: Mar 25, 2025, 9:39 AM IST
தமிழில் புன்னகை மன்னன், விஜய்யின் பத்ரி, விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே வீரரான இவர் வில் வித்தை பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு அரியவகை ரத்த புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷிஹான் ஹுசைனியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.