பாடலாசிரியரும் - இயக்குனருமான பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான, அகத்தியா படத்தின் ட்ரைலர் வெளியானது.
பா விஜய், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் 'அகத்தியா'. இந்த படத்தின் ட்ரைலரிலேயே 120 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆத்மாக்களுடன் பேச போவதாக ஒரு குரல் கூறுகிறது.
அர்ஜுன் ஆவியுடன் பேசி, ஒரு பிரமாண்ட மாளிகைக்குள் என்ன நடந்தது என்பதை ஜீவா தெரிந்து கொள்வதும். அந்த வீட்டுக்குள் இருக்கும் ரகசிய கதவு எப்படி திறக்க சில குறிப்புக்கள் மூலம் ஜீவா கண்டு பிடிப்பது என நொடிக்கு நொடி ஆர்ச்சியத்தை ஏற்படுத்தும் திருப்பங்களுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, அர்ஜுன் சர்ஜா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துளள்னர். பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.