Dear : குட் நைட் படத்தின் Female Version போல.. GVP-யுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - Dear பட ட்ரைலர் இதோ!

Apr 5, 2024, 7:37 PM IST

இவ்வாண்டு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தும், இசையமைத்தும் வரும் ஜிவி பிரகாஷ் குமார் இசை மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் தான் "டியர்". இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள நிலையில், வருண், அபிஷேக் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், மூத்த நடிகர் இளவரசு, மூத்த நடிகை ரோகினி, நடிகர் காலி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாயகன் ஜிவி பிரகாஷ் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சத்தமாக குறட்டை விடும் பழக்கம் உள்ளது தெரியவருகிறது. 

அதன்பிறகு நாயகன் படும் அவஸ்தைகளை காமெடி கலந்த காதலோடு சொல்லி உள்ள திரைப்படம் தான் டியர். தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வரும் ஏப்ரல் 11ம் தேதி இந்த படம் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.