Ganesh A | Updated: Mar 30, 2025, 1:43 PM IST
Good Bad Ugly Movie God Bless U Song : அஜித்தின் 63-வது படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அனிருத் பாடிய God Bless U பாடலை செகண்ட் சிங்கிளாக ரிலீஸ் செய்துள்ளனர்.
God Bless U பாடலுக்கு ரோகேஷ் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இப்பாடலை அனிருத் உடன் சேர்ந்து பால் டப்பாவும் பாடி இருக்கிறார். சிறையில் கைதிகளுடன் நடிகர் அஜித் குத்தாட்டம் போடும்படி இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. இப்பாடல் தற்போது யூடியூப்பில் செம வைரலாகி வருகிறது. இப்பாடலுக்கு வியூஸ் மட்டுமின்றி லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் பிளாப் ஆனதால் குட் பேட் அக்லி படம் மூலம் அஜித் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.