இயக்குநர் ஜே.எஸ்.கே. கூறும்போது, “உண்மையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நான் எழுதிய கதை இந்தப் படம். நான்கு பெண்களைப் பற்றிய கதை. இதைப் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அழுத்தமான விழிப்புணர்வு நிச்சயம் இருக்கும். பெண்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம் என்று கூறினார்