Oct 20, 2022, 10:11 PM IST
சமீப காலமாக, கன்னட திரைப்படங்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் படங்களாக மாறியுள்ளது. அந்த வகையில், பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகன் துருவா சர்ஜா நடிக்கும் புதிய படத்தின், தலைப்பு அதிரடியான டீசருடன் வெளியாகியுள்ளது.
KVN புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாகும் இந்த படம், பான் - இந்தியா படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பல பெரிய நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேங் ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தின் டீஸரே வேற லெவல் அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் அளவில் உள்ளது. KD தி டெவில் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகி, மற்றும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.