Nov 10, 2022, 6:27 PM IST
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், என ஆல் ரவுண்டராக கலக்கி வரும் நடிகர் தனுஷ், தற்போது முதல்முறையாக 'வாத்தி' படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடித்து வருகிறார். தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை, வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
தமிழில் வாத்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு, தெலுங்கில் சார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இந்த படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் லிரிக்கல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அழகிய காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். போயிட்டு தனுஷ் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள வா வாத்தி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.