கார் ரேஸில் வெற்றி; குழந்தை போல் துள்ளிக்குதித்து கொண்டாடிய அஜித்! வைரல் வீடியோ

Jan 13, 2025, 3:00 PM IST

நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் அணியினர் துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டார். 24 மணிநேரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடம்பிடித்தது. இதற்கான முடிவுகள் வந்ததும் நடிகர் அஜித், குழந்தைபோல் துள்ளிக் குதித்து கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிக்கு பின் அளித்த பேட்டியில் தன் மனைவி ஷாலினி கொடுத்த உத்வேகம் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என அஜித் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி மேடையில் இருந்தபடியே தன் மனைவி ஷாலினிக்கு பிளையிங் கிஸ் கொடுத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டார்.