பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?

பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?

Ansgar R |  
Published : Oct 12, 2024, 06:58 PM ISTUpdated : Oct 12, 2024, 07:01 PM IST

Bigg Boss Sachana : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சாச்சனாவிற்கு வார்னிங் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி வெகு விமர்சையாக தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன். இதுவரை இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களோடு தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஆண்கள் அணி Vs பெண்கள் அணி என்று இரு அணிகளாக பிரித்து வீட்டினிடையே ஒரு கோடு ஒன்றை போட்டு மிரட்டி இருந்தார் பிக் பாஸ். 

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொடங்கிய வெறும் 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டது அதிரடி திருப்பமாக பார்க்கப்பட்டது. பிற சீசன்களை ஒப்பிடும்பொழுது பெரிய அளவில் பஞ்சாயத்துகள் எதுவும் இல்லை என்றாலும், சற்று சுவாரஸ்யத்தோடு நகர்ந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த சூழலில் சுமார் ஒரு வார காலம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் எலிமினேட் செய்யப்பட்ட நடிகை சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் ரகசிய கதவின் மூலம் உள்ளே நுழைந்தார். 

உண்மையில் அவருடைய வருகை 17 போட்டியாளர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அதே சமயம் வெளியிலிருந்து உள்ளே வந்த சாச்சனா, பாடகர் ஜெஃப்ரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாக இருக்கிறது என்று பேசி இருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய பிக் பாஸ் "வெளியில் இருந்து தற்போது மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கும் சாச்சனா, தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடுகளை பார்த்தது குறித்தும், வெளியில் மக்கள் என்ன கருத்துக்கள் பிக் பாஸ் குறித்து பேசுகிறார்கள், போட்டியாளர்கள் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை இனி ஒரு முறை கூட சக போட்டியாளர்களோடு பகிர்ந்து கொள்ள கூடாது" என்று கடுமையான வார்னிங் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more