அந்த 6 பேருமே ஒருத்தன் தான்... பரபரப்பு காட்சிகளுடன் வெளியான 'சர்தார்' டீசர்!

Sep 29, 2022, 10:03 PM IST

நடிகர் 'கார்த்தி' நடிப்பில், சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நாளைய தினம் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' வெளியாக உள்ளது. இந்த படத்தில் மற்ற கதாபாத்திங்களை விட கார்த்தியின் வேடம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளதாக, வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரான உமர் சந்து தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள, 'சர்தார்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் வித்தியாசமானதாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வேற லெவலுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்தி இந்த படத்தில் 6 தோற்றத்தில் நடித்துள்ளார். மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசர் இதோ...