Sep 11, 2024, 12:14 AM IST
தமிழ் சினிமாவை பொருத்தவரை, பெரிய கலை குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் தான் ஜெயம் ரவி. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், கடந்த 2003ம் ஆண்டு தமிழில் அவருடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான "ஜெயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கலை உலகில் அறிமுகமானார்.
இந்த 21 ஆண்டுகளில் எண்ணற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதில் வெற்றி கண்டவர் அவர். குறிப்பாக அண்மையில் வெளியான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம், ஜெயம் ரவியின் புகழை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றது. "தாம் தூம்", "பேராண்மை", "நிமிர்ந்து நில்", "ரோமியோ ஜூலியட்" மற்றும் "பூக்கோலம்" என்று பல வித்தியாச வித்தியாசமான படங்களில் நடித்து புகழ்பெற்ற ஜெயம் ரவி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சைரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அவருடைய நடிப்பில் இந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவருடைய சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு சராசரியாக 15 முதல் 20 கோடி ரூபாய் வரை அவர் சம்பளமாக பெறுகின்றார்.